மற்ற கட்சியினர் தவெகவில் இணைவது பலமா?. தலைவலியா?.. தவெகவுக்கு உள்ள சவால்...
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை அமைத்திருக்கிறது. ஒருபக்கம் அதிமுக 47 தொகுதியிலும் மட்டுமே வெற்றி பெற்றதால் பழனிச்சாமி தலைமையின் மீது அதிருப்தியடைந்த சிவி சண்முகம் தலைமையிலான 24 எம்.எல்.ஏக்கள் தவெகவை ஆதரிப்பதாக அறிவித்தார்கள்.
அதோடு சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக அவர்கள் வாக்களித்தார்கள்.மேலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் நான்கு பேர் அக்கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்துவிட்டனர். அனேகமாக இடைத்தேர்தலில் அவர்கள் தவெக சார்பில் போட்டியிடுவார்கள் என தெரிகிறது..
ஒருபக்கம் அதிமுக மூன்றாம் இடத்திற்கு சென்று விட்டதால் அக்கட்சியிலிருந்து பலரும் விலகி தவெக பக்கம் தாவி வருகிறார்கள். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட தவெகவுக்குவருவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் கூட ஒரு டீமோடு விரைவில் தவெகவில் இணைவார் என செய்திகள் கசிந்திருக்கிறது..
அப்படி தவெகவுக்கு வருபவர்கள் கண்டிப்பாக பதவியை எதிர்பார்த்தே வருவார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் பதவி மற்றும் வாய்ப்புகள் தவெகவில் கிடைக்கவில்லை என்றால் கண்டிப்பாக அவர்கள் மீண்டும் பழைய கட்சிக்கோ அல்லது வேறு கட்சிக்கோ தாவுவதற்கு வாய்ப்புண்டு. எனவே புதிதாக வருபவர்களால் தவெகவுக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
கட்சியின் வளர்ச்சிக்காக அவர்கள் செயல்பட மாட்டார்கள். எனவே மாற்று கட்சியிலிருந்து வருபவர்களை இணைக்கும் போது தவெக கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் தவெகவுகுக் அது புதிய தலைவலியை கொண்டு வரும் என தவெக நிர்வாகிகளும், அரசியல் விமர்சகர்களும் சொல்கிறார்கள்.