1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. gr swamaninathan says state gone becasue of cellphone

செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது!.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு..

vijay
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி மலர்ந்திருக்கிறது. நடிகராக இருந்து அரசியல் கட்சியை தொடங்கி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறிய விஜய் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சரக அமர்ந்துவிட்டார். 
தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக குழந்தைகளையும் ஜென்சி இளைஞர்களையும் சொல்கிறார்கள்.
 
முதன்முறை வாக்களர்கள் பலரும் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். ஏனெனில் செல்போனில் உள்ள இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் விஜய்க்கு ஆதரவாக அதிக அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டது ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது..
 
விஜய்க்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் ஜெகதீஸ் என்பவர் ஒரு பெரிய டீமை அமைத்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் விஜயை புரொமோட் செய்தார்கள். அதுவே தவெகவின் வெற்றிக்கு முக்கிய காரணம் என பலரும் சொல்கிறார்கள். 
 
இந்நிலையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் ‘செல்போன்களால் இரண்டு நாடுகள் மட்டுமல்ல. ஒரு மாநிலமும் போய்விட்டது என்று நான் நினைக்கிறேன். மொபைல் போன்கள் கணவன் மனைவியான பல குடும்ப பிரச்சனைகளுக்கும், விவாகரத்துக்கும் முக்கிய காரணமாக உருவெடுத்துள்ளது’ என்று கவலை தெரிவித்திருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
சங்கீதா தொடர்ந்த விவகாரத்து வழக்கு!.. விஜய் நேரில் ஆஜராவாரா?...