முத்துக்குமாரை சிறையில் அடைக்க உத்தரவு - நீதிமன்றம் அதிரடி
தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை புதுப்பிப்பது, புதிய பள்ளிகளுக்கு அனுமதி கொடுப்பது போன்ற விஷயங்களுக்காக கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் கட்சி நிதி என்கிற பெயரில் ரூ.400 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பள்ளி நிறுவனங்களிடம் அரசகுமார் என்பவர் பள்ளி நிறுவனங்களிடம் லஞ்சத்தை பெற்று அன்பில் மகேஷிடம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அரசகுமார் அன்பில் மகேஷுக்கு எதிராக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து விட்டார்..
இரண்டாவது குற்றவாளியான திமுக பிரமுகர் முத்துக்குமார் சில நாட்கள் தலைமறைவாக இருந்தார். ஆனால், அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் முத்துக்குமார் இன்று காலை நீதிமன்றத்தில் சரணடைந்தார்
அவர் மூலமாகவே அன்பில் மகேஷுக்கு எதிரான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியானதாகவும் சொல்லப்படுகிறது. அவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்தினார்கள். அதன்பின் முத்துக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வருகிற 12-ம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.