எதிரிகள் மாறுவார்கள்.. திமுக நிலைச்சி நிக்கும்!.. கே.என்.நேரு பேட்டி...
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஜோசப் விஜய் முதலமைச்சரானதும் கடந்த திமுக ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்களின் பட்டியல் தயாரானது. அதில் ஒவ்வொருவராக குறி வைத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அன்பில் மகேஷ், கே.என் நேரு, எ.வ.வேலு ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தினார்கள். அதில் முதல் நபராக அன்பில் மகேஷ் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த குறி கே.என்.நேரு என சொல்லப்படுகிறது .
இன்று காலை கூட கே.என்.நேருவுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். விரைவில் திருச்சி இடைத் தேர்தல் என்பல் இதுபோன்ற நடவடிக்கைகளில் தவெக அரசு ஈடுபடுகிறது என திமுகவினர் சொல்கிறார்கள்.
.
இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கே.என்.நேரு நான் அப்படி நினைக்கவில்லை.. நான் ஒருவன் இருந்தால்தான் திமுக வெற்றி பெற முடியும்.. இல்லையென்றால் திமுக தோற்றுவிடும் என்றெல்லாம் கிடையாது.. நான் மட்டுமல்ல லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள்.. நான் இல்லை என்றாலும் அவர்கள் வேலை செய்வார்கள். செய்தியாளர் பாண்டே சொன்னதையே நானும் சொல்கிறேன்..
காங்கிரஸ் Vs திமுக, எம்.ஜி.ஆர் Vs திமுக, ஜெயலலிதா Vs திமுக, இப்போது விஜய் Vs திமுக.. இப்படி எதிரிகள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.. ஆனால், திமுக நிலைத்து நிற்கும் என அவர் கூறினார்.