நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..
தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றதன் பின் முதன் முறையாக இன்று காலை டெல்லி சென்றார். அங்கு தமிழக அரசு இல்லத்தில் தங்கிய முதல்வர் விஜய் மாலை 4:30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
அப்போது காவிரி குறுக்கே கர்நாடகா மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது, அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டும், வான்வழி அமைப்பு மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும், இலங்கை சிறைபிடித்த 58 மீனவர்கள் மற்றும் 266 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கை மனுவை விஜய் மோடியிடம் வழங்கினார்.
அதன்பின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் விஜய் சந்தித்து பேசினார்
. அப்போது ஓசூர், கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதியை ஒதுக்க வேண்டும், தமிழ்நாட்டில் வலுவான கல்வி சூழலை மேலும் வலுப்படுத்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை தமிழ்நாட்டில் நிறுவிட வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளையும் விஜய் வைத்ததாக சொல்லப்படுகிறது.