சிறுமியின் பேச்சைக்கேட்ட முதல்வர் விஜய்!.. உடனே மாத்திட்டாரு!...
தவெக தலைவர் விஜய் முதலமைச்சரானதும் பல அதிரடியான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாக வருகிறது. அதோடு தலைமை செயலகமும் மொத்தமாக மாறிப் போயிருக்கிறது என்கிறார்கள். தலைமை செயலக ஊழியர்கள். மற்ற முதலமைச்சர்கள் போல் இல்லாமல் ஒரு அரசு அதிகாரி போல காலை 9:55 மணிக்கெல்லாம் விஜய் அலுவலகத்திற்கு வந்து விடுகிறாராம். அதேபோல் மதிய உணவை தன்னுடையே விஜய் எடுத்து வந்து விடுகிறார். சமீபத்தில் கூட இது தொடர்பான ஏஐ புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
ஒருபக்கம் பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருட்களை தடுக்கும் நடவடிக்கை, டாஸ்மாக் கடைகளை மூடுவது என தொடர்ந்து அறிவிப்பு வெளியாகி வருகிறது. இந்நிலையில்தான் ஒரு சிறுமியின் பேச்சைக் கேட்டு முதலமைச்சர் விஜய் செய்துள்ள மாற்றம் பொது மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. உயர் அதிகாரிகளின் நாற்காலியின் மீது வெள்ளை துண்டை போட்டு வைத்திருக்கும் பழக்கம் பல வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது.
14 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் விசி பிரியா கங்குஜம் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரிகள் பயன்படுத்தும் வெள்ளை துண்டு விரிப்பு பழக்கம் ஆங்கிலேயர் காலத்திலிருந்து வந்த ஒரு விஐபி கலாச்சாரம்.. இதை கைவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
அதை ஏற்று நாற்காலியின் மீது வெள்ளை துண்டு போடும் கலாச்சாரத்தை முதலமைச்சர் விஜய் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.. அதிகாரத்தின் அடையாளமாக கருதப்படும் துண்டு கலாச்சாரத்தை விஜய் அகற்றியிருப்பது பொது மக்களிடம் பாராட்டை பெற்று வருகிறது..