தமிழ்நாட்டை கடனிலிருந்து மீட்க என்ன செய்ய வேண்டும்?!.. நிதியமைச்சர் சொல்வது என்ன?..
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் தமிழகத்தின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கையை நேற்று நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார். அப்போது தமிழ்நாட்டில் மொத்த கடன் 13.18 லட்சம் கோடியாக இருப்பதாக கூறினார்.
இதன் காரணமாக தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொருவரின் தலையிலும் 1.28 லட்சம் கடன் இருப்பதாகவும் அவர் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். குறிப்பாக கடந்த 60 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடந்த ஐந்து வருட திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் இரண்டு வருடமாக உயர்ந்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்..
அதேபோல் மகளிர் உரிமைத்தொகை, மகளிர் இலவச பேருந்து உள்ளிட்ட இலவச திட்டங்களால் அரசுக்கு மாதம் 25 ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகிறது எனவும் அவர் கூறியிருந்தார்.
அதோடு தமிழ்நாட்டை கடனிலிருந்து மீட்பது எப்படி என்பது பற்றிய 6 முக்கிய முடிவுகளையும் அவர் கூறியிருந்தார்.
ஊழலற்ற நிர்வாகத்தின் மூலம் வருவாய் இழப்புகளை சரி செய்தல்..
ஊழலற்ற முறையில் அரசு பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் கோருதல்...
மின்துறை போக்குவரத்துக் கழகம், நுகர் பொருள், வாணிப கழகத்தை சீர் செய்தல்..
தற்போதுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி வருவாய் திரட்டல்
தனியார் முதலீட்டை ஈர்க்கும் உட்கட்டமைப்பு உருவாக்கி மூலதன செலவினம் மேற்கொள்ளுதல்
நேர்மையான நம்பகமான வரவு செலவு திட்டமிடல் என தெரிவித்திருக்கிறார்.