1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk candidate mariya wilson attack video

வீடு புகுந்து தாக்கும் ஆர்.கே.நகர் தவெக வேட்பாளர் மரிய வில்சன்!.. பின்னணி என்ன?..

maria wilson
தலைவர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முதலாக 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. அதுவும் தவெக எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது. விஜயும் முடிந்தவரை பல தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அதேநேரம் மற்ற அரசியல்வாதிகள் போல் இல்லாமல் ஒரு நாள் பிரச்சாரம் என்றால் ஒரு நாள் ரெஸ்ட் என பின்பற்றி வருகிறார். எனவே மற்ற அரசியல் தலைவர்களை விட மிகவும் குறைவான தொகுதியில்தான் அவர் பிரச்சாரத்தை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது..

ஒருபக்கம், விஜய் அரசியலுக்கு வந்தது முதலிலே நாம் தமிழர் கட்சியினரும், திமுகவினரும் அவர் மீது பல வகையான அவதூறுகளை தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். தற்போது தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விபரங்களை தோண்டி எடுத்து அவர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிடும் மரிய வில்சன் தொடர்பான வீடியோ ஒன்றை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.. அதில், ஒரு வீட்டில் புகுந்து மரிய வில்சன் வீட்டிலுள்ள பொருட்களை அடித்து உடைக்கிறார். அங்கிருகும் சில பெண்களையும் தாக்க முயலும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. சொத்துக்காக சொந்த அண்ணன் குடும்பத்தை மரிய வில்சன் தாக்கியதாக பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

video

ஆனால், இது 2022ம் வருடம் நடந்த ஒரு சம்பவம் என தவெகவின் விளக்கம் அளித்துள்ளனர். பழைய வீடியோவை இப்போது தூக்கிக்கொண்டு வந்து தவெகவுக்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்கிறார்கள்’ என அவர்கள் கூறி வருகிறார்கள்.


About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
புரிஞ்சுக்கோங்க போப்!.. ஈரான் வெரி டேஞ்சர்!.. டொனால்ட் டிரம்ப் பதிலடி!..