1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn govt spend twenty five thosuand crore fore free plans

இலவச திட்டங்களால் 25 ஆயிரம் கோடி கூடுதல் செலவு!.. நிதியமைச்சர் தகவல்!...

vijay magalir
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது. விஜய் முதல்வராக பதவியேற்றபோது தமிழகத்தின் நிதிநிலை எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்து விரைவில் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுவோம் என கூறியிருந்தார்.

இந்நிலையில், நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று மாலை தமிழகத்தின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கையை செய்தியாளர்கள் முன்பு வெளியிட்டார். அப்போது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் 13.18 லட்சம் கோடி எனவும், தனிநபர் மீதான கடன் 1.28 லட்சம் ரூபாயாக அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் 2020 - 21ல் தனிநபர் மீதான கடன் 67 ஆயிரத்து 87 ரூபாயாக இருந்ததாகவும் கடந்த 5 வருடங்களில் அது 92 சதவீத வளர்ச்சியை கண்டு 1.28 லட்சமாக அதிகரித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.. மேலும், மகளிர் உரிமை தொகை, மகளிர் இலவச பேருந்து, பயிர் கடன் தள்ளுபடி ஆகிய திட்டங்களால் வருடத்திற்கு தமிழக அரசுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என தெரிவித்துள்ள மரிய வில்சன் வருவாய் ஆதாரத்தை பெருக்காமலேயே செலவு செய்யப்படுவதால் கடன் சுமை அதிகரித்துள்ளதாக கூறியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டில் அதிகமாகும் முதியோர்களின் எண்ணிக்கை!.. நிதியமைச்சர் தகவல்!..