தமிழ்நாட்டில் அதிகமாகும் முதியோர்களின் எண்ணிக்கை!.. நிதியமைச்சர் தகவல்!..
தவெக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று மாலை தமிழகத்தின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் 13.18 லட்சம் கோடி எனவும், தனிநபர் மீதான கடன் 1.28 லட்சம் ரூபாயாக அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் 2020 - 21ல் தனிநபர் மீதான கடன் 67 ஆயிரத்து 87 ரூபாயாக இருந்ததாகவும் கடந்த ஐந்து வருடங்களில் அது 92 சதவீத வளர்ச்சியை கண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 934 ஆக உயர்ந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்..
மேலும் தமிழ்நாட்டின் மக்கள் தொகை மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் 2011ல் மொத்த மக்கள் தொகையில் முதியவர்கள் எண்ணிக்கை 10.6 சதவீதம் இருந்தது, 2031-ல் இது 18.2 சதவீதமாக உயரும் என கணிக்கப்படிருக்கிறது எனவும் கூறினார். மேலும் அதிகம் பேர் முதுமை அடைவதற்கு ஏற்ப வருவாய் முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டிய எனவும் அவர் கூறியிருக்கிறார்.
மக்கள் தொகையில் முதியோர் எண்ணிக்கையில் வளர்ச்சி முக்கிய மாநிலங்களோடு ஒப்பிட்டால் கர்நாடகாவில் 56.3 சதவீதமாகவும், மகாராஷ்டிராவில் 50 சதவீதமாகவும் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அது 71.7 சதவீதமாக இருக்கிறது. தேசிய சராசரி 56 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.