1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Government Advises Ayyappa Devotees to Reconsider Sabarimala Journey Amid Kerala Rains

சபரிமலை செல்லும் பக்தர்கள் மறுபரிசீலனை செய்யவும்.. தமிழக அரசு வலியுறுத்தல்..

சபரிமலை பயணம்
கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் தங்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. 
 
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் இருந்து ஐந்தாம் தேதி வரை சபரிமலை நடை திறக்கப்படும் வழக்கம் உள்ளதால், பக்தர்கள் பலர் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இருப்பினும், தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக பம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ள சோகமான சூழ்நிலை நிலவுகிறது. இதனை முன்னிட்டு, தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் தங்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தற்போதைய பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் அரசின் எச்சரிக்கையை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
மொரோக்காவில் இருந்து கடலில் நீந்தியே ஸ்பெயின் சென்ற 60,000 அகதிகள்.. அதிர்ச்சி தகவல்..