1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn assembly speaker sent notice to four admk mlas

ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏக்களுக்கும் நோட்டீஸ்!.. தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள?!...

speaker
அதிமுகவின் தொடர் தோல்வி காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமை மீது அதிருப்தியடைந்த சிவி சண்முகம் மற்றும் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் தவெகவை ஆதரிப்பதாக அறிவித்தனர். அதோடு அவர்களில் 24 பேர் சட்டசபையில் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்..
 
அதைவிட ஹைலைட்டாக அவர்களின் மரகதம் குமரவேல், சத்​ய​பா​மா, ஜெயக்​கு​மார், இசக்கி சுப்​பையா  ஆகிய நான்கு அதிமுக எம்எல்ஏக்கள் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டனர். இது பழனிச்சாமிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. எனவே, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சபாநாயகரிடம்  புகார் மனுவை கொடுத்தது.
 
இந்நிலையில்தன, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து தொடர்பாக விளக்கம் கேட்டு சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அந்த நான்கு எம்எல்ஏக்களுக்கும் தற்போது நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். ஒரு வாரத்திற்குள் சரியான விளக்கமளிக்க வேண்டும் என அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
 
எனவே 4 அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தவெகவில் இணைவதற்காகவே அந்த நான்கு பேரும் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்கள். அப்படியிருக்க, தவெக அவர்களுக்கு ஆதரவாக நிற்குமா? இல்லை சட்டப்படி நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
அடுத்த கட்டுரையில்
விஜயின் பொருளாதார இலக்கு ஆச்சர்யமா இருக்கு!.. நிதி ஆயோக் துணை தலைவர் பாராட்டு...