தொடர்புடைய செய்திகள்
- அவரைத் தனியாக விட்டுட்டு போயிட்டீங்க..அனாதையா செத்துக் கிடந்தாரு: பாரதிராஜா மனைவியிடம் கோபப்பட்ட கங்கை அமரன்
- பாரதிராஜா எனக்கு பண்ணத மறக்கவே மாட்டேன்!.. ராமராஜன் பேட்டி!..
- பாரதிராஜாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்!.. வைரல் போட்டோஸ்!..
- பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை!. முதல்வர் விஜய் அறிவிப்பு...
- இயக்குனர் இமயம் பாரதிராஜா காலமானார்.. திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி..!
பதவி சுகத்துக்காக அலைந்தால் காலம் காறிதுப்பிவிடும்!. அப்போதே அரசியல் பேசிய பாரதிராஜா!..
மறைந்த இயக்குனர் பாரதிராஜாவை திரைப்பட இயக்குனர் என்கிர வட்டத்திற்குள் மட்டும் அடைத்து விட முடியாது. அவர் ஒரு சமூக போராளியாகவும் இருந்தார். நடப்பு அரசியலை தனது திரைப்படங்களிலும் பிரதிபலித்திருக்கிறார். அவர் இயக்கிய என்னுயிர் தோழன் திரைப்படத்தை பார்த்தால் அது புரியும்..
அரசியல் கட்சிகள் ஒரு அடிமட்ட தண்டனை எப்படி நடத்துகிறது என்பதை அந்த படத்தில் அவ்வளவு தெளிவாக காட்டியிருப்பார். அதேபோல் அவரின் பல படங்களிலும் அரசியல் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அது மட்டுமல்லாமல் தன்னுடைய திரைப்படங்களில் சாதி எதிர்ப்பையும் தொடர்ந்து அவர் பதிவு செய்து வந்தார். வேதம் புதிது, அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்கள் அதற்கு முக்கிய சாட்சி..
அரசியல்வாதிகளை எடுத்துக் கொண்டால் கலைஞர் கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் ஆகிய இருவருடன் நெருக்கமாக பழகியவர்தான் பாரதிராஜா, பாரதிராஜாவின் திரைப்படங்களை தொடர்ந்து பாராட்டி வந்தார் எம்ஜிஆர்.
2002ம் வருடம் பாரதிராஜா கொடுத்த பேட்டியில் பதவி சுகத்துக்காக அலைகிற யாரும் பொதுவாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.. காலத்திற்கும் நிலைத்து நிற்பது போல் ஆக்கபூர்வமாக செயல்பட்டால் மட்டுமே இங்கு யாராக இருந்தாலும் மரியாதை.. இல்லையென்றால் காலம் காரி துப்பிவிடும் என அப்போதே மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார் பாரதிராஜா.
