Gen-Z அரசியலை புரிந்து கொள்ளவே முடியவில்லை.. காங்கிரஸ், போராடியிருந்தால் தர்மேந்திர பிரதான் விலகியிருக்க மாட்டார்: திருமாவளவன்..
இன்றைய இளம் தலைமுறையான Gen-Z இளைஞர்கள் எதை விரும்புகிறார்கள், என்ன மாதிரியான மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதை யாராலும் எளிதில் யூகிக்க முடியவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வியப்புடன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய அவர், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் சாரை சாரையாகக் கிளம்பி வந்து ஒன்றிய அரசையே பணிய வைத்திருப்பதாகக் குறிப்பிட்டது அரசியல் அரங்கில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எவ்வளவோ போராடியும் சாதிக்க முடியாததை, இந்த இளம் தலைமுறையினர் தங்களின் தனித்துவமான போராட்ட முறைகள் மற்றும் சமூக வலைதளங்களின் வழியே சாதித்து காட்டியுள்ளதாக அவர் புகழ்ந்துள்ளார்.
குறிப்பாக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை சுட்டிக்காட்டிய திருமாவளவன், பாரம்பரியமான கட்சிகளின் வழக்கமான போராட்டங்கள் மூலம் மட்டுமே இது நடந்திருந்தால் இவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுத்திருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
பாரம்பரிய அரசியல் வியூகங்களை மீறி, Gen-Z தலைமுறையினர் கையாளும் புதிய வடிவிலான எதிர்ப்புகள் ஆட்சியாளர்களை உலுக்கி போட்டிருப்பதை இந்த நிகழ்வு அப்பட்டமாக உணர்த்தியுள்ளது. வழக்கமான அரசியல் கணக்குகளுக்கு அடங்காத இந்த புதிய இன்டர்நெட் யுக இளைய சமுதாயம், நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் திசையையும் மாற்றி அமைக்கும் அபார சக்தியைக் கொண்டுள்ளதை இந்தச் சம்பவம் நிரூபித்துக் காட்டியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Edited by Siva
