தொடர்புடைய செய்திகள்
- சென்னை நதிகள் மறுசீரமைப்புக்கு ரூ.7,500 கோடி.. மத்திய நிதி ஒப்புதல்: முதல்வர் விஜய்யின் முயற்சிக்கு மாபெரும் வெற்றி!
- எம்ஜிஆரை அடுத்து மூகாம்பிகை கோவிலுக்கு செல்ல இருக்கும் தமிழக முதல்வர் விஜய். அரசியலுக்கு நடுவே ஆன்மீக பயணம்...
- டெல்லியிலிருந்து கர்நாடகா போகும் முதல்வர் விஜய்!.. பின்னணி என்ன?..
- நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய்.. டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்து இதுதான்...!
- ரொம்ப சந்தோஷமா இருக்கு மேடம்..! இனிமே எந்த பயமும் இல்லாமல் நாங்க தைரியமா வீதில நடப்போம். சிங்கப்பெண்ணிடம் நன்றி சொன்ன பெண்
நீட் தேர்வை ரத்து பண்ணுங்க!.. நிதி ஆயோக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன?..
தமிழக முதல்வர் விஜய் 3 நாள் அரசு பயணமாக நேற்று காலை 10 மணி அளவில் டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உள்ளிட்ட பலரையும் சந்தித்தார். இன்று காலை பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் விஜய் பேசியதாவது.
நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் நிலுவை தொகை 3284 கோடியை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்.
ஒகேனக்கல் மூணாம் கட்ட கூட்டு குடிநீர் வழங்கல் திட்டத்திற்கு 2283.40 கோடி நிதி தேவைப்படுகிறது
திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும்..
பெண்கள் பாதுகாப்பில் வலுப்படுத்த ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையம் தேவை..
குலசேகரப்பட்டினம் விண்வெளி மையத்தை தேசிய விண்வெளியில் உற்பத்தி மையமாக மாற்ற வேண்டும்..
செங்கல்பட்டு - திருச்சி ஜி.எஸ்.டி சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.
திருச்சி - கரூர், கரூர் - கோவை சாலைகளை ஆறு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.
சென்னை - குமரி அதிவேக ரயில்வே வழித்தடம் அமைக்க வேண்டும்..
சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு உரிய அங்கீகாரம் தரவேண்டும்
என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் விஜய் முன் வைத்து பேசியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
