1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tks elangovn talk about vijay

கூட்டணிக்காக விஜயை மிரட்டுகிறார்கள்!.. டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி...

tks elangovan
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜயை டெல்லிக்கு வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே கடந்த 13ம் தேதி டெல்லிக்கு சென்று விசாரணையில் கலந்து கொண்ட நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார்.

இந்நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் ஓசூரில் செய்தியாளரிடம் பேசியபோது ஒரு முக்கிய தகவலை கூறினார். ‘கூட்டணிக்காக பாஜக விஜயை மிரட்டுவது நன்றாகவே தெரிகிறது.. இது மக்களுக்கும் தெரியும்.. இன்னமும் ஜனநாயகம் படத்திற்கு தணிக்கை சான்றிதழை கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்கள். விஜய் தங்களின் கூட்டணிக்கு வர வேண்டும் என பாஜக விரும்புகிறது..

பாஜக ஒருவர் மீது குற்றச்சாட்டை முன் வைப்பார்கள்.. அதே நபர் பாஜகவில் இணைந்து விட்டால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை பாஜக கைவிட்டு விடும். இதுதான் பாஜகவின் கொள்கை. வருமானவரித்துறை, சிபிஐ போன்ற அரசு முகாம்களை பாஜக தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.. பாஜக என்ன செய்கிறது என்பதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
விஜய் - சிபிஐ விசாரணை செய்தி மொத்தம் கற்பனை.. என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது: அரசியல் விமர்சகர்கள்