செவ்வாய், 17 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 ஜனவரி 2026 (21:46 IST)

நாளை நீதிமன்றத்தில் ஜனநாயகன் வழக்கு!.. இந்த மாதம் ரிலீஸாகுமா ஜனநாயகன்?!...

jananayagan
விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் பிரச்சனையில் சிக்கியதால் படம் வெளியாகவில்லை
. முதலில் படத்திற்கு யூஏ சான்றிதழ் கொடுக்கிறோம் என சொல்லிவிட்டு திடீரென படம் பார்த்த தணிக்கை உறுப்பினர்களில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் மறு தணிக்கை செய்ய வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னது. ஆனால் ரிலீஸ் செய்து நெருங்கியதால் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு சொன்னார். ஆனால் உடனே தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. அதையடுத்து தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. எனவே, தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியது. ஆனால் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலேயே நடத்தலாம் என உச்ச உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது. மேலும், ஜனவரி 20ம் தேதி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என சொல்லியது.

இந்நிலையில்தான், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளைக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது. தலைமை நீதிபதி மஹிந்திரா ,நீதிபதி அருள் முருகன் அடங்கி அமர்வு நாளை காலை 11.30 மணிக்கு இந்த வழக்கை விசாரிக்கிறது. ஜனநாயகத்திற்கு பிரச்சனை முடிந்து விரைவில் படம் வெளியாக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.