’திரௌபதி 2’ வெளியாவதால் தள்ளிப்போன விஜய் படம்.. தயாரிப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, நடிகர் விஜய்யின் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'தெறி'யின் மறுவெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.
2016-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம், வரும் ஜனவரி 23-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நாளில் 'திரௌபதி 2' மற்றும் 'ஹாட்ஸ்பாட் 2 மச்' ஆகிய சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ள நிலையில், அந்த படங்களின் தயாரிப்பாளர்கள் தாணுவிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தனர்.
வளரும் இயக்குநர்கள் மற்றும் புதிய தயாரிப்பாளர்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, தாணு பெருந்தன்மையுடன் 'தெறி' படத்தின் ரிலீஸை தள்ளிவைத்துள்ளார். "புதிய தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரது ட்வீட் இதோ: திரௌபதி 2 மற்றும் Hotspot 2 திரைப்படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று ,வளரும் இயக்குநர்கள், புதிய தயாரிப்பாளர்களிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் "தெறி" திரைப்பட வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
Edited by Siva