1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. joseph vijay announced candidates for by election

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!.. வேட்பாளர்களை அறிவித்த தவெக!..

joseph vijay
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்தவுடன் அதிமுகவிலிருந்து 7 எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டனர். எனவே அந்த ஏழு தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இரண்டு தொகுதிகளுக்கும் வருகிற 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதைத்தொடர்ந்து திமுக சார்பாக மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.. இவர்கள் இரண்டு பேருமே வழக்கறிஞர்கள் மற்றும் திமுகவில் பதவியில் இருப்பவர்கள்.

இந்நிலையில்தான், இந்த இரண்டு தொகுதிகளிலும் தவெக சார்பில் கூட்டணி வேட்பாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். மதுராந்தகம் தொகுதியில் ஏற்கனவே வெற்றி பெற்ற கே. மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்தியபாமாவும் போட்டியிடுவார்கள் என முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார். இவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே அதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அமெரிக்க பல்கலைக்கு 20 மில்லியன் டாலர் நன்கொடை கொடுத்த இந்திய தம்பதி.. இந்திய பல்கலைக்கு அளித்திருக்கலாமோ?