1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. thirumavalavan said there was a talk he is cm

என்னை முதல்வராக்கும் முயற்சி நடந்தது!.. திருமாவளவன் உண்மையை சொல்லிட்டாரே!..

thirumavalavan
தவெகவுக்கு 108 எம்.எல்.ஏக்கள் கிடைத்து பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அக்கட்சி காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கேட்டார். மற்ற எல்லோரும் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தநிலையில் விசிக மட்டுமே 2 நாட்கள் நேரம் எடுத்துக்கொண்டது.

விசிக விஜயை ஆதரிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு எல்லாதரப்பிலும் ஏற்பட்டது. அதன்பின் ஒருவழியாக விசிக தவெகவை ஆதரிப்பதாக அறிவித்தது. அதன்பின்னரே தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்திக்க தவெகவை ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை வைத்தார்.

விசிக பதிலை சொல்லாமல் கால தாமதம் செய்தபோது விசிக துணை முதல்வர் கேட்கிறது, அமைச்சர் பதவி கேட்கிறது என பல செய்திகள் வெளியானது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் ‘என்னை முதல்வராக்கும் ஒரு முயற்சி பேசப்பட்டதாக நான் கேள்விப்பட்டேன். ஆனால், இதுதொடர்பாக எந்த திமுக என்னிடம் எதுவும் பேசவில்லை. ஒருபக்கம், இது அவசரமான முடிவு என நிர்வாகிகள் சொன்னார்கள். அதன்பின்னரே தவெகவுக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்தோம்’ என கூறினார்.