இடைத்தேர்தலில் திமுக ஜெயிச்சே ஆகணும்!.. பிரச்சாரத்திற்கு போகும் முக ஸ்டாலின்!..
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 47 எம்.எல்.ஏக்களில் 7 பேர் தங்களின் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் சேர்ந்து விட்டனர். அந்த ஏழு தொகுதிகளும் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வருகிற அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது..
தவெகவை பொருத்தவரை இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவது அதற்கு முக்கியமான ஒன்று. ஏனெனில் இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் கூடுதலாக இரண்டு எம்.எல்.ஏக்கள் கிடைப்பார்கள். ஒரு பக்கம் சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்திருப்பதால் இந்த இரண்டு தொகுதிளின் வெற்றி அந்த கட்சிக்கும் முக்கியம்.
அதேபோல் இந்த இரண்டு தொகுதிகளில் மீண்டும் வென்று விட வேண்டுமென அதிமுகவும் நினைக்கிறது. எனவே எடப்பாடி பழனிச்சாமி அந்த தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்..
இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் பணி, கட்சி நிர்வாகிகளின் பணிகள் குறித்து துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், தாராபுரத்தில் அக்டோபர் 2ம் தேதியும், மதுராந்தகத்தில் அக்டோபர் 3ம் தேதியும் அவர் பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்..