1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. nirmalkumar blame dmk not taken any action

வீரமணி விவகாரம்!.. திமுக ஆட்சியில் 500 கோடி பேரம்!.. நிர்மல்குமார் புகார்!....

nirmalkumar
கடந்த பல வருடங்களாகவே ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் அதிபர் வீரமணி பல சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்ததாக சொல்லப்படுகிறது . ஆனால் கடந்த திமுக ஆட்சியில் இது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாறாக அவரிடம் பணம் கொண்டு சில காவல்துறை அதிகாரிகள் இந்த வழக்கை மூடி மறைத்து விட்டனர்.. நீதிமன்றத்திலும் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது.
தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, மகேந்திரன், கணேசன் உள்ளிட்ட சிலரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிறையில் அடைத்தது..

நேற்று மதுராந்தகம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய் ‘திமுக ஆட்சி காலத்தில் வீரமணியை தப்ப விட்டு விட்டார்கள்.. அவர்களுக்குள் என்ன டீலிங் நடந்தது?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்கள் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் ‘திமுக ஆட்சியில் ஜெம் வீரமணியிடம் பேரம் பேசி, கட்டப் பஞ்சாயத்து செய்து ரூ.500 கோடி வரை பணம் பறிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வருகின்றன.. அப்போது முதலமைச்சர் ஸ்டாலின்தானே காவல்துறையை கையில் வைத்திருந்தார்.. அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?.. வீரமணி தொடர்பான புகாரை ஸ்டாலினிடம் காவல்துறை நிச்சயம் சொல்லியிருப்பார்கள்.. வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ கிடைத்த பிறகும் ஆதாரங்களை கண்டுபிடிக்க திமுக ஆட்சியில் ஏன் சிறப்பு புலனாய் குழு அமைக்கவில்லை?’ என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நான் என்ன பண்ணாலும் ட்ரோல் பண்றாங்க!.. மேயர் பிரியா வேதனை...