தொடர்புடைய செய்திகள்
- ஜாக்டோ, ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக பேருந்து ஊழியர்கள் ஸ்டிரைக்...? மாணவர்கள் நிலைமை...?
- ஆசிரியர்களுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர் மறியல்: ஈரோட்டில் பதற்றம்
- மாணவனை மயக்கி பலமுறை உல்லாசம்: கைதான இளம் ஆசிரியை
- சகோதரியை கர்ப்பமாக்கிய கொடூர அண்ணன் மீது போக்ஸோ ...
- ஆசிரியரை ரேகிங் செய்த பள்ளி மாணவர்கள்!! பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
பள்ளி திறக்காததால் ... மாணவி உயிரிழந்த சோகம் ...
கோவை மாவட்டத்தில் பள்ளி திறக்காததால் வீட்டுக்கு திரும்பிய 1 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தண்ணீர் தொட்டியில் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள பொன்னபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் - மகேஷ்வரி தம்பதிக்கு அமுதா என்ற மகள் இருந்தாள். அவர் அருகே உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
தற்போது பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பள்ளி திறக்காமல் இருந்தத் கண்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் தண்ணீர் தொட்டிக்கு அருகில் அமுதா விளையாடும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நெடுநேரமாகியும் மகளைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்த பெற்றோர், அமுதா தண்ணீர் தொட்டியில் பிணமாக இருந்ததைப் பார்த்து கதறி அழுதனர்.
இது குறித்து தகவல் அறிந்த போlலீஸார் அமுதாவின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகிறது.
அடுத்த கட்டுரையில்
