1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sensational Turn in TN Politics: TVK Government Cancels Five Major Transport Tenders From DMK Regime

திமுக ஆட்சியில் 60000 டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர்.. தவெக அரசு அதிரடி ரத்து...

vijay
போக்குவரத்துத் துறையில் திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவல், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
முந்தைய திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையின் கீழ் இறுதி செய்யப்பட்ட ஐந்து முக்கிய டெண்டர்களை தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
 
குறிப்பாக, தமிழக போக்குவரத்துத் துறை பேருந்துகளுக்காக 60 ஆயிரம் டயர்கள் வாங்குவதற்கு திமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டர் தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த டெண்டர் நடைமுறைகளில் முறையான வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி தவெக அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், இது குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, விரைவில் புதிய டெண்டர்கள் விடப்படும் என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, முந்தைய திமுக ஆட்சி காலத்தில் நடந்த பல்வேறு நிர்வாக முறைகேடுகளையும், டெண்டர் ஊழல்களையும் ஒவ்வொன்றாக தோண்டி எடுத்து வருவது திமுகவினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 'லஞ்சமில்லா நல்லாட்சி' என்ற கொள்கையோடு செயல்பட்டு வரும் தவெக அரசின் இந்த அதிரடி டெண்டர் ரத்து நடவடிக்கைகள், தமிழக அரசியலில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயான மோதலை மேலும் உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
 
Edited by Siva
About Writer
Webdunia