தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம்!.. ஆவணங்கள், பணம் பறிமுதல்!.. வசமாக சிக்கிய செந்தில் பாலாஜி தம்பி!..
தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக தவெக எம்.எல்.ஏக்களிடம் சமீபத்தில் சிலர் பேரம் பேச முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளங்கோவனிடம் சிலர் ரூ.35 கோடி பேரம் பேசியதையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, திருநாவுக்கரசு என்பவர் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதில் கார்த்திக், நரேஷ் ஆகிய இருவரும் முக்கியமானவர்களாக பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு நெருக்கமானவர்கள். மேலும் தங்களின் வாக்குமூலத்தில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சொல்லியே இதை செய்தோம் என 9 பேரும் சொல்லியிருக்கிறார்கள்.
இதையடுத்து, செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் இருவரிடமும் விசாரணை நடத்த முடிவெடுத்த போலீசார் அவர்கள் இருவரையும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினார்கள். ஆனால் அவர்கள் இதுவரை ஆஜராகவில்லை. அதோடு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான் இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நரேஷ் என்பவரின் வீட்டில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத லட்சக்கணக்கான பணத்தை போலீசார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அந்த ஆவணங்களையும் பணத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.