1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜனவரி 2019 (16:48 IST)

சகோதரியை கர்ப்பமாக்கிய கொடூர அண்ணன் மீது போக்ஸோ ...

ஹர்யானா மாநிலத்தில் உள்ள ஹிசாரில் 16 வயது மாணவியை பலமுறை வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய உறவினர் முறை அண்ணன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பெற்றோர் இல்லை என்பதால் தன் பாட்டி மற்றும் தாத்தாவுடன் ஹிசார் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்திருக்கிறார். 
 
இதுகுறித்து ஹிசார் பகுதி போலீஸ் அதிகாரி கூறியதாவது : சிறுமி கர்ப்பமானதை அடுத்து அவரது உறவினர் முறை சகோதரன் மீது சிறுமி(மைனார்) கொடுத்த புகாரின் அடிபடையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். என்று தெரிவித்தார்.

குற்றவாளி மீது இந்திய தண்டனைச் சட்டம்  376 (2) (n)( பலமுறை பெண்ணை கற்பழித்தல்), மற்றும் 506 ( குற்றச்செயலில் ஈடுபடுதல் ), ஆகிய 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகிறது.
 
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் உண்டு. ஆனால் அவர்களின் பெற்றோர் இறந்து விடவே அவர்களின் தாத்தா மற்றும் மாமா வீட்டில் வளர்ந்து வந்துள்ளனர்.
 
அப்போது கடந்த ஆண்டு ஏப்ரல் 16 ல் மாமாவுடைய மகன் ( அண்ணன் முறை) சிறுமியை மிரட்டை பலமுறை பலாகாரம் செய்துள்ளான்.இது பல மாதங்கள் நடந்துள்ளது.இந்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் சிறுமியை மிரட்டி உள்ளான்.
 
மேலும் பாதிக்கப்பட்ட மாணவி இம்மாதம் 14 ஆம் தேதி அவருடைய அத்தையை சந்தித்து தான் பாதிக்கப்பட்டதைக் கூறியுள்ளார். உடனடியாக மெடிக்கல் செக்கப்புக்காக மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.
 
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர்  அவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு  சிறுமியை அழைத்துச் சென்று புகார் அளித்ததன் பேரில் குற்றவாளி மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.