ஜாக்டோ, ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக பேருந்து ஊழியர்கள் ஸ்டிரைக்...? மாணவர்கள் நிலைமை...?

teachers
Last Modified திங்கள், 28 ஜனவரி 2019 (12:24 IST)
ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணியாளர்கள் சங்க,வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பாக இன்று மாலையில் முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிகின்றன.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கடந்த 22 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள், உள்ளிட்ட 56 துறைகளில் வேலைசெய்யும் பல லட்சக் கணக்கான தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
கடந்த 25 ஆம் தேதி மறியலில் ஈடுபட்டவர்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோரை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.
 
மேலும் இப்போராட்டம் தொடரும் என்றும் வரும் 28 ஆம் தேதி முதல் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ளனர்.
 
தற்போது ஆசிரியர்களுக்கு ஆதரவாக தமிழக அரசின் போகுவரத்து பணியாளர்கள் ஆதரவு அளித்துள்ளதால் இன்னும் சிறிது நாட்களில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என தகவல் வெளியாகிறது.


இதில் மேலும் படிக்கவும் :