1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thanga Tamilselvan comments on ADMK CM candidate selecting issue

முதல்வர் வேட்பாரை அறிவிக்கும் திராணி இல்லை... தங்க தமிழ்செல்வன் விமர்சனம்!

தங்கதமிழ்செல்வன்
முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் துணிச்சல், ஆளுமை அதிமுகவினரிடம் இல்லை என தங்க தமிழ்செல்வன் விமர்சனம். 
 
அதிமுக செயற்குழு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற காரசார விவாதம் நடைபெற்றதே தவிர அதற்கான தீர்வு எட்டப்படவில்லை.  
 
இந்நிலையில் செயற்குழு கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கே.பி.முனுசாமி முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிப்பார்கள் என தெரிவித்தார். 
 
இதனிடையே இதனை விமர்சித்துள்ளார் தங்க தமிழ்செல்வன். அவர் கூறியதாவது, எத்தனை செயற்குழு, பொதுக்குழுவை கூட்டினாலும் தேர்தலுக்கு முன்பு அதிமுகவால் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியாது. முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் துணிச்சல், ஆளுமை அவர்களிடம் இல்லை. 
 
திமுக கூட்டணியில் மு.க.ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர் என்று அனைவருக்கும் தெரியும். அவரை முன்னிலைபடுத்தி தான் நாங்கள் பிரசாரம் செய்வோம். அவர்தான் அடுத்த தமிழக முதல்வராக வருவார். இந்த துணிச்சல் ஊழல் ஆட்சி புரிகின்ற எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இல்லை என விமர்சித்துள்ளார். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
கொரோனா தடுப்பூசி தயாரிப்பிற்காக கொல்லப்பட்ட சுறாக்கள் – இத்தனை லட்சமா?