1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Udhayanidhi Stalin comments on ADMK CM Candidate issue

அதிமுக முதல்வர் வேட்பாளர் பாஜக பிரமுகரா கூட இருக்கலாம்... உதயநிதி!

அதிமுக
திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்டு விமர்சித்துள்ளார். 
 
அதிமுக செயற்குழு இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ர காரசார விவாதம் நடைபெற்றதே தவிர அதற்கான தீர்வு எட்டப்படவில்லை. 
 
இந்நிலையில் செயற்குழு கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கே.பி.முனுசாமி முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிப்பார்கள் என தெரிவித்தார். 
 
இதனிடையே திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின், அதிமுகவில் முதல்வர் வேட்பாளருக்கு போட்டிப் போட்டுக்கொள்கின்றனர் என விமர்சமன் செய்தார். மேலும், இவர்கள் இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டாலும் திடீரென இருவரும் இணைந்து பாஜக உறுப்பினரை கூட முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்து அறிவிக்க வாப்புள்ளது என பேசியுள்ளார்.