திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (14:10 IST)

முதல்வர் வேட்பாளர் யார்? செயற்குழு கூட்டத்தில் அதிரிபுதிரி விவாதம்!!

முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து காரசார விவாதம் செயற்குழு கூட்டத்தில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதிமுக செயற்குழு இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் 15 நீர்மானங்கள் அதிமுக சார்பில் நிறைவேற்றப்பட்டது. 
 
அதிமுக செயற்குழு கூட்டம், அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் ? கட்சிக்கு ஒற்றை தலைமையா ?  11 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும் சூழ்நிலையில்  நடைபெறுகிறது. 
 
இந்நிலையில், 3 மணிநேரத்திற்கு மேலாக நீடிக்கும் செயற்குழுவில், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து காரசார விவாதம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து இன்றே முடிவெடுக்க செயற்குழுவில் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் சிலர் வலியுறுத்தியதால் இந்த விவாதம் துவங்கியுள்ள போல. 
 
11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்த பின் முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவெடுக்கலாம் என ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளும், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க, அவரது ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருவதால் செயற்குழு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்.