ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By SInoj
Last Updated : திங்கள், 28 செப்டம்பர் 2020 (16:02 IST)

ஓபிஎஸ், இபிஎஸ்-ஐ முதல்வராக்கியது யார் ? ஜெயலலிதாவா? சசிகலாவா? அதிமுகவின் வெடித்தது சர்ச்சை

இன்று அதிமுக செயற்குழுபின் துணைமுதல்வர் ஓபிஎஸ், முதல்வர் இபிஎஸ் ஆகிய இருவரிடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகிறது.

அதில், செயற்குழுபின் துணைமுதல்வர் ஓபிஎஸ் என்னை முதல்வராக்கியது ஜெயலலிதா என்றும், உங்களை முதல்வராக்கியது சசிகலா என்று பேசியதாகவும் ,இதற்குப் பதிலடி கொடுத்த இபிஎஸ் நம் இருவரையும் முதல்வராக்கியது சசிகலா என்று பதிலடி கொடுத்ததாகவும் தெரிகிறது.

மேலும் ஓபிஎஸ் அடுத்து முதல்வராக விரும்புவதாகவும் ஆனால் அதற்கு இபிஎஸ் முட்டிக்கட்டை போடுவதாகவும் தகவல்கள் வெளியாகிறது. இதனால் அதிமுகவில் மீண்டும் உட்கட்சி சர்ச்சை வெடித்துள்ளது.

செயற்குழு கூட்டத்திற்குப் பின், முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து வரும் அக்டோபர் 7ம் தேதி  யார் முதல்வர் வேட்பாளார் என்பதை அறிவிப்பார்கள் என்று  அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.