திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 28 செப்டம்பர் 2020 (15:07 IST)

முதல்வர் வேட்பாளர் யார்? என முடிவாகாமல் முடிந்த செயற்குழு கூட்டம்!

முதல்வர் வேட்பாளர் யார்? என முடிவாகாமல் முடிந்த செயற்குழு கூட்டம்!
வரும் சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை செய்யவும், முதல்வர் வேட்பாளர் குறித்து ஒருமித்த முடிவு எடுக்கவும் இன்று அதிமுக செயற்குழு பரபரப்பாக கூடியது
 
இன்று காலை 10 மணிக்கு கூடிய இந்த கூட்டம் 5 மணி நேரத்திற்குப் பின்னர் சற்று முன்னர் முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஒருமித்த முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் அதிமுகவில் உள்ள ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முதல்வர் வேட்பாளர் குறித்த ஆலோசனையை தொடங்கியபோது கூச்சல் குழப்பங்கள் ஏற்படுத்தியதால் முதல்வர் வேட்பாளர் குறித்து ஒருமித்த முடிவு எடுக்காமலேயே கூட்டம் முடிவடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகவும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதற்கான இடத்தை கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 5 மணி நேரம் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் மொத்தம் 15 தீர்மானங்கள் இயற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது