தீபாவளிக்கு ரூ.441 கோடிக்கு சரக்கடித்த மது பிரியர்கள்!....
புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் மதுபான கடைகளை தனியார் நடத்தும் நிலையில் தமிழகத்தில் அரசு டாஸ்மாக் என்கிற பெயரில் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது.
தீபாவளி, ஆயுத பூஜை, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை வரும்போது குறிப்பிட்ட அளவு டாஸ்மாக் வசூலையும் நிர்ணயம் செய்கிறார்கள். அந்த வகையில் தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாட்டில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.441 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது..
அதிகபட்சமாக திருச்சியில் ரூ.99 கோடிக்கும், சென்னையில் ரூ.96 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியிருக்கிறது. அதேபோல் மதுரையில் 88.38 கோடிக்கும், சேலத்தில் 87.52 கோடிக்கும், கோவையில் ரூ.70.66 கோடிக்கும் மதுபானம் விற்பனையாகியிருக்கிறது.