1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. totally eight murders in tamilnady yesterday

தீபாவளியன்று 8 பேர் கொலை! - கொலைநகரமாக மாறுகிறதா தமிழகம்?..

murders
கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் தொடர்ந்து கொலைகள் நடக்கிறது.. குறிப்பாக ரவுடிகள் பழிவாங்கல் காரணமாக வெட்டிக் கொல்லப்படுகிறார்கள். இளைஞர்கள் கொல்லப்படுகிறார்கள். இதை திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில்தான், தீபாவளியான நேற்று மட்டும் தமிழகத்தில் 8 கொலைகள் நடந்துள்ளது. கடலூரில் ரவுடி பிருத்திவிராஜ், தேனியில் போலீஸ் அதிகாரி செந்தில்குமார், சமயபுரத்தில் ராகுல் மற்றும் விஷால், மானாமதுரையில் ரவுடி விக்னேஷ், திருவள்ளுவரில் இளம்பெண் மேகலா, திருச்சி புறத்தாக்குடியில் ஐடி ஊழியர் கிறிஸ்டோபர், கல்லல் அருகே ரவுடி நவீன் ஆகியோர் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இப்படி தமிழகத்தில் தொடர் கொலைகள் நடைபெற்று வருவது பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.


About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
எல்லா வருசமும் இந்த முறைகேடு நடக்குது - நூலக சங்கத் தலைவர் அதிர்ச்சி பேட்டி