1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. special bus for people who returned home after diwali

தீபாவளி முடிந்து ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

bus
பொதுவாக தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்களில் தொடர் விடுமுறைகள் வரும்போது சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் பலரும் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் அரசு பேருந்தை தேர்ந்தெடுப்பதால் ஒவ்வொரு முறையும் அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. நவம்பர் 8ம் தேதியான நேற்று தீபாவளி என்பதால் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக பல ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், தீபாவளி முடிந்து மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் 6815 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இது இல்லாமல் 4382 வழக்கமான பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தேசிய குத்துச்சண்டை வீராங்கனை சடலமாக கண்டெடுப்பு: நெடுஞ்சாலையில் பிணம் இருந்ததால் அதிர்ச்சி...