1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu Rain chnaces today

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகத்தில் தென்மேற்கு பபருவக்காற்று காரணமாக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் டெல்டா பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும், ஆகஸ்டு 12 வரை தமிழகத்தில் மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
13ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: தலைமை கொறடா கோவி.செழியன் அறிவிப்பு