செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (12:14 IST)

13ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: தலைமை கொறடா கோவி.செழியன் அறிவிப்பு

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என அரசு தலைமை கொறடா கோவை செழியன் அவர்கள் அறிவிப்பு செய்துள்ளார்
 
முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வரும் 13ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோவி செழியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5 மணி அளவில் இந்த கூட்டம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்திற்கு திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தலைமை கொறடா கோவி செழியன் அறிவிப்புச் செய்துள்ளார் 
 
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் இந்த எம்எல்ஏ கூட்டம் நடைபெறுகிறது என்பதும், பட்ஜெட் தொடரின் போது திமுக எம்எல்ஏக்கள் செயல்பட வேண்டியது குறித்து அறிவுறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது