வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (11:57 IST)

காங்கிரஸ் முன்னாள் தலைவர் மறைவு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் மறைந்த நிலையில் அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவராக இருந்தவர் திண்டிவனம் ராமமூர்த்தி. சமீப காலமாக உடல்நல குறைவாக இருந்த இவர் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.