ஆடி அமாவாசை; தர்ப்பணம் செய்ய தடை! – தமிழக அரசு கட்டுப்பாடு!
ஆடி அமாவாசையான இன்று நீர்நிலைகளில் தர்ப்பணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது ஆடி மாதம் என்பதால் மக்கள் பலர் கோவில்களில் கூடுவதை தவிர்க்க கோவில்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும் இன்று ஆடி அமாவாசையாதலால் இந்த நாளில் ஆறு, குளம், நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷன்ர் விடுத்துள்ள அறிவிப்பில் “தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று மக்கள் தர்பணம் செய்ய சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கோ, நீர் நிலைகளுக்கோ, கோவிலுக்கோ செல்ல வேண்டாம்” என வலியுறுத்தியுள்ளார்.