தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படுமா?!... ஒன்றிய அரசு இன்று முடிவு!...
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மாந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களாகவே போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நேற்று மத்திய அமைச்சர்கள் ஜே.பி நட்டா உள்ளிட்ட சிலருடன் கரப்பான் பூச்சி ஜனதா தள கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கரப்பான் பூச்சி ஜனதா தள கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தர்மேந்திர பிரதான் பதிவி விலக வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.. இதுபற்றி முடிவெடுக்க ஒருநாள் அவகாசம் வேண்டும் என ஒன்றிய அரசு எங்களிடம் கேட்டிருக்கிறது என கூறினார்கள்.
இது தொடர்பாக ஒன்றிய அரசு இன்று முக்கிய முடிவை எடுக்கவிருக்கிறது. அநேகமாக மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதானை தூக்கிவிட்டு அந்த இடத்தில் வேறு ஒருவரை அமர வைக்க வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் தர்மேந்திர பிரதானுக்கு வேறு ஒரு துறை வழங்கவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.