திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (09:29 IST)

உள்ளாட்சி தேர்தல்; இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! – முதல்வர் ஆலோசனை!

தமிழக உள்ளாட்சி தேர்தல் விரைவில் தொடங்க உள்ள நிலையில் திமுக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்த திட்டமிடலில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது, கூட்டணி அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.