திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (11:39 IST)

அதிகரிக்கும் கொரோனா; சேலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக மாவட்ட அளவில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சேலம் மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பாதிப்பு நிலவரம் பொறுத்து கட்டுப்பாடுகள் அறிவிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சேலம் மாவட்டத்திலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சேலம் மாவட்டம் முழுவதும் நாளை முதல் அனைத்து கடைகளும் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். சேலத்தில் செயல்படும் இரண்டு வார சந்தைகளுக்கு அனுமதி மறுப்பு. வணிக வளாகங்கள், நகைக்கடைகள், சூப்பர் மார்கெட் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் வணிக நிலையங்கள் ஞாயிற்று கிழமைகளில் செயல்படவும் அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.