தொடர்புடைய செய்திகள்
- தனித்தேர்வர்களுக்கு தனியா தேர்வா? ஆல்பாஸ் போடுங்க! – வானதி சீனிவாசன் கோரிக்கை!
- நடிகர் விஜய் வரி வழக்கு மேல்முறையீடு; பட்டியலில் சேர்க்க உத்தரவு!
- அதிமுக அலுவலகத்தில் நடக்க இருந்த கூட்டம் திடீர் ரத்து! – காரணம் என்ன?
- முன்னாடி நின்ன காரை கூட விடல; எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடி ரெய்டு!
- மதுரையில் ஐந்து பைசாவுக்கு பிரியாணி! – சீல் வைத்த மாநகராட்சி!
நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பிற மாவட்டங்களில் மேகமூட்டம் மற்றும் சிறிய அளவிலான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
