அதிமுக அலுவலகத்தில் நடக்க இருந்த கூட்டம் திடீர் ரத்து! – காரணம் என்ன?

Prasanth Karthick| Last Modified வியாழன், 22 ஜூலை 2021 (11:39 IST)
அதிமுக உட்கட்சி தேர்தல் குறித்து இன்று ஆலோசனை நடைபெற இருந்த நிலையில் திடீரென கூட்டம் ரத்து செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக கட்சி ரீதியான பொறுப்புகள் மற்றும் பதவிகளுக்கு உட்கட்சி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு வந்த நிலையில், இன்று அதுகுறித்த ஆலோசனை கூட்டத்தை நடத்துவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது திடீரென ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒருபுறம் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்து வரும் நிலையில், மறுபுறம் அதிமுக கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :