1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. police arrested four people related to interest

மாசம் 20 ஆயிரம் வட்டி!.. கந்துவட்டி கொடுமை!.. மதுரையில் பெண் தற்கொலை!...

madurai
ஏழை மற்றும் நடுத்தர வர்த்தக நடுத்தர மக்கள் திருமணம், மருத்துவம், கல்வி போன்ற முக்கிய செலவுகளுக்கு யாரும் அவர்களுக்கு உதவாத நிலையில் வட்டிக்கு பணம் வாங்குவதை பழக்கமாக கொண்டுள்ளனர். இதைப் பயன்படுத்தி வட்டுக் கொடுப்பவர்கள் பலரும் மிகவும் அதிகளவுக்கு வட்டி வசூலித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் பல வருடங்களாகவே கந்துவட்டி கொடுமையால் பலரும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு கந்துவட்டி கொடுமைகளுக்கு எதிராக சட்டமும் இயற்றப்பட்டது. ஆனாலும் அதை யாரும் தற்போது பின்பற்றுவது இல்லை..

இந்நிலையில்தன், மதுரையில் பிரேமா என்பவர் தனது மகளின் திருமண செலவுக்காக 2021ம் வருடம் கலையரசி என்பவரிடம் இரண்டு லட்சம் அவர் கடன் பெற்றிருக்கிறார். 2 லட்சம் கடனுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வட்டி கட்டவேண்டும் என கலையரசி அவருக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார். ஆனால், அவரால் அந்த தொகையை கட்ட முடியவில்லை.

கடந்த ஜூலை 13ஆம் தேதி பிரேமாவை வட்டி கேட்டு மிரட்டிய கலையரசு தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து நேற்று இரவு பிரேமா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பிரேமாவின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை உடனே கைது செய்யக்கோரி ராஜாஜி மருத்துவமனைக்கு வெளியே அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கலையரசி உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இளைஞர் தலை துண்டித்து கொலை!.. தென்காசியில் பதட்டம்!...