1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 ஜூலை 2021 (12:47 IST)

இல்லத்தரசிகளுக்கு இப்பவே மாத உரிமை தொகை தரணும்! – கமல்ஹாசன் கோரிக்கை!

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட இல்லத்தரசிகள் மாத ஊதியத்தை நடப்பு பட்ஜெட் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழகத்தில் பெரும்பாலும் குடும்ப தலைவிகள் தங்கள் சொந்த செலவுகளுக்காக கூட மற்றவர்களை சார்ந்திருக்கும் நிலையே உள்ளது. இதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மாதம்தோறும் உரிமை தொகை தருவது என்ற அறிவிப்பை முதன்முதலில் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டது.

அதன்பிறகு பல அரசியல் கட்சிகள் இந்த திட்டத்தை தங்களது தேர்தல் வாக்குறுதிகளிலும் இடம்பெற செய்தன. திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 மாதம்தோறும் உரிமை தொகையாக வழங்குவதாக தேர்தலில் அறிவித்திருந்தது.

திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி இந்த திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். அதற்கான அறிவிப்புகளை நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.