நடிகர் விஜய் வரி வழக்கு மேல்முறையீடு; பட்டியலில் சேர்க்க உத்தரவு!

Prasanth Karthick| Last Modified வியாழன், 22 ஜூலை 2021 (11:52 IST)
நடிகர் விஜய்க்கு வரி விலக்கு வழக்கில் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்த மேல்முறையீட்டு மனு பட்டியலிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் 2012ம் ஆண்டில் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டு மனு அளித்த நிலையில் சமீபத்தில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இதை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதி உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை எண் இட்டு விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :