மதுரையில் ஐந்து பைசாவுக்கு பிரியாணி! – சீல் வைத்த மாநகராட்சி!

சென்னையில் 350 கடைகளுக்கு சீல்
Prasanth Karthick| Last Modified வியாழன், 22 ஜூலை 2021 (10:06 IST)
மதுரையில் ஐந்து பைசாவுக்கு பிரியாணி என விளம்பரம் செய்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

மதுரை செல்லூர் பகுதியில் புதிதாக திறந்த பிரியாணி கடை ஒன்றில் மக்களை ஈர்க்கும் விளம்பர நோக்கில் 5 பைசாவுக்கு பிரியாணி என்று விளம்பரம் செய்துள்ளனர். இதனால் சுற்றுவட்டாரத்தில் மக்கள் பலர் பழைய 5 பைசாவுடன் பிரியாணி கடையில் குவிந்ததால் அப்பகுதி கூட்டமாக இருந்துள்ளது.

தற்போது தமிழகத்தில் கொரோனா விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் விதிமுறைகளை மீறி பிரியாணி கடையில் கூட்டம் அதிகமாக குவிந்ததால் சம்பந்தப்பட்ட பிரியாணி கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். புதிய பிரியாணி கடை திறக்கப்பட்ட மறுநாளே சீல் வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :