1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. kaylee hottle passed away in car accident

Godzilla Vs Kong படத்தில் சிறுமியாக நடித்த கெய்லி ஹாட்டில் மரணம்!. ரசிகர்கள் சோகம்!...

kaylee
ஹாலிவுட் நடிகர், நடிகைகள் அவ்வப்போது கார் விபத்தில் பலியாகும் சம்பவம் நடந்து வருகிறது. ஏற்கனவே Fast and Furious பட நடிகர் பால் வாக்கர் கார் விபத்தில் மரணமடைந்தார். இந்நிலையில்தான் Godzilla Vs Kong படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான இளம் நடிகை கெய்லி ஹாட்டில் அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது..

கெய்லி ஹாட்டில் ஒரு காது கேளாத மாற்றுத் திறனாளி பெண் ஆவார். கடந்த 2021 ஆம் வருடம் வெளியான காட்ஸில்லா வெர்சஸ் காங் திரைப்படத்தில் சிறுமியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அதன் பின் 2024ம் வருடம் வெளியான இந்த படத்தில் இரண்டாவது பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

இதுபோக மேலும் சில படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இந்நிலையில்தான், கடந்த 21ம் தேதி நடந்த சாலை விபத்தில் இவர் உயிரிழந்திருக்கிறார். இப்போது இவருக்கு வயது 18. அதிவேகமாக அவர் காரை ஓட்டியதே விபத்திற்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மாசம் 20 ஆயிரம் வட்டி!.. கந்துவட்டி கொடுமை!.. மதுரையில் பெண் தற்கொலை!...