1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sundar-c-about-actor-vijay-in-rangaraj-pandey-interview

விஜய்க்கும் உங்களுக்கும் உள்குத்து கூட்டணியா? - பாண்டேவின் கேள்விக்கு . சிரித்துக்கொண்டே பதிலளித்த சுந்தர்.சி

Sundar C Interview
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் பேட்டிகள் சமூக வலைதளங்களில் தினமும் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், பிரபல இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவுக்கு அளித்த நேர்காணல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
 
இந்தத் தேர்தலில் சுந்தர்.சி மதுரையில் அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதி கட்சி சார்பில் போட்டியிருகிறார். 
 
இந்த நிலையில்  ஒரு  சேனலுக்காக பேட்டி அளித்திருந்தார். நிகழ்ச்சியை பிரபல பத்திரிக்கையாளர் ரங்கடாஜ் பாண்டே ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.   
அப்போது பாண்டே தனது பாணியில் அதிரடியாக,  விஜய்க்கும் உங்களுக்கும் இடையே மறைமுகமாக ஏதாவது உள்குத்து கூட்டணி உள்ளதா? என்று ஒரு கேள்வியை முன்வைத்தார். சற்றும் எதிர்பாராத இந்தக் கேள்வியைக் கேட்ட சுந்தர்.சி, முதலில் அதனைப் பார்த்து சத்தமாகச் சிரித்துவிட்டார்.
 
பின்னர் பதிலளித்த சுந்தர்.சி, விஜய் ஒரு சூப்பர் ஸ்டார். இப்போது அவர் ஒரு மாபெரும் கட்சியின் தலைவராகவும் உருவெடுத்துள்ளார். ஆனால், நான் வெறும் ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ-வாகப் போட்டியிடும் ஒரு மனிதன் மட்டுமே. எங்கள் இருவருக்கும் இடையில் எந்த உள்குத்து கூட்டணியும் இல்லை. அதே சமயம், அவரைப் பற்றி நான் எப்போதுமே தப்பாகப் பேச மாட்டேன் என்று கூறினார்.
அடுத்த கட்டுரையில்
ஒரு எறும்பு 21 ஆயிரம்!.. கென்யாவிலிருந்து கடத்திய சீனருக்கு சிறை தண்டனை!...